"அசாதாரணமான காலம் என்பதால் பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு" - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அசாதாரணமான காலம் என்பதால் பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதிக அளவு இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமமாக ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவன பங்குகள் பெருமளவில் விலை சரிந்தது.
Comments